Thursday, December 23, 2010

எங்களின் குட்டி தேவதை



குட்டி தேவதை இப்ப நிறைய குறும்பு செய்கிறாள்.

Tuesday, December 21, 2010

சங்கமம் 2010 – வாங்க! வாங்க!!


ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களின் தொடர் உழைப்பில், பதிவுலக நட்புகளின் ஆலோசனைகளோடு சங்கமம் 2010 நிகழ்ச்சிகளின் திட்டமிடல் கிட்டத்தட்ட நிறைவடைந்து பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.


ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்
இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சில பதிவர்கள் மட்டுமே வருகையை நேரிடையாக, கைபேசி, மின்மடல் மூலம் உறுதிசெய்துள்ளார்கள். சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களிடமோ அல்லது erodetamizh@gmail.com என்ற மின் மடல் முகவரிக்கோ உங்கள் விருப்ப உணவை (சைவம்/அசைவம்) தெரிவிப்பதன் மூலம், விருந்தை சிறப்பான முறையில் நடத்த உதவுவதுடன் உணவு விரயத்தைத் தடுக்கும் சமுதாயக் கடமையைச் செவ்வனே கடைப்பிடிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.

வெளியூரில் இருந்து வரும் பதிவர்கள் தங்குவதற்கு அறை எடுக்க வேண்டுமாயின் அது குறித்த உதவிகளுக்கு பதிவர்.ஜாபர் (98658-39393) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.


இடம்:
டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

நிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
 
 
பதிவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டிருக்கிறோம். மிகச் சரியாக காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி மாலை 5 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருப்பதால், 10.30 மணிக்கு பதிவர்கள் அரங்கத்திற்கு வருகை தருவது நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் துவங்க உறுதுணையாக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்
காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ்
வணக்கம்
*வரவேற்புரை

*பதிவர்கள்
அறிமுகம்
*கூட்ட
துவக்க உரை

முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)
*சிறுகதைகளை உருவாக்குவோம் -
எழுத்தாளர். பெருமாள் முருகன்
*உலக
மொக்கையர்களே ஒன்று படுங்கள் -
எழுத்தாளர். பாமரன்
*குறும்படம்
எடுக்கலாம் வாங்க -
அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
*நிழற்படங்களில்
நேர்த்தி -
கருவாயன்’ - சுரேஷ்பாபு
*உலகத்திரைப்படங்கள்
ஒரு பார்வை -
சிதம்பரன்.கி

மதியம்
01-30 – 02.30 மதிய உணவு
இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)
*இன்றைய இணையமும் வலைப்பூக்களும் -
ஓசை செல்லா
*
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் -
லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)
மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)
*பதிவர்கள் கலந்துரையாடல் -
ஒருங்கிணைப்பு “சேர்தளம்”

நன்றியுரை

மாலை
05.00 மணி நிகழ்ச்சி நிறைவு
 
 

                                                                                         குழும உறுப்பினர்களின் உழைப்பும் ஈடுபாடும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

சங்கமம் இலச்சினையை முகப்பில் இட்ட, இடுகை இட்ட பதிவர்களை நன்றிகளோடு வணங்குகிறோம்.

சுட்டியோடு சங்கமம் இலச்சினையை வெளியிட்டுள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம், இன்ட்லி திரட்டிகளுக்கு மிகுந்த நன்றிகள்.
உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
உங்கள் வருகையே நம் வெற்றி!

தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

சங்கமம் 2010 குறித்து பதிவர்கள்
தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக எழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.
எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு...உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...

___________________
            

 

Monday, December 20, 2010

கடவுளும் குடிகாரரும்

ஒரு நாள் கடவுள் தண்ணி அடிக்கலாமுன்னு டாஸ்மாக் பாருக்குப் போனாரு. போயி ஒரு புல் பாட்டல் வாங்கி அடிச்சாரு. போதை ஏறலை. மறுபடியும் 2 புல் வாங்கி அடிச்சாரு.அப்பவும் போதை ஏறலை,இதைப் பாத்துக்கிட்டிருந்த குடிகாரரு, யோவ் என்னய்யா 3 புல் அடுச்சும் உனக்குப் போதையே ஏரலையான்னு கேட்டாரு. அதுக்கு கடவுள் எனக்கு எவ்வளவு குடிச்சாலும் போதை ஏறாது, ஏன்னா நான் கடவுள் அப்டின்னாரு. உடனே நம்ம குடிகாரரு, யோவ் உனக்கு இப்ப போதை புல்லா ஏறிருச்சு மெதுவா ஊட்டுக்குப் போயி படுதுக்க அப்டின்னாராம்.

Saturday, December 18, 2010

ஈரோடு சங்கமம் 2010



அன்புடன் அழைக்கின்றேன்.............